Wednesday, March 21, 2012

மதமா? கடவுளா?

மதத்தை பார்க்கிறவன் கடவுளை காண்பதில்லை! கடவுளை காண்கிறவன் மதத்தை பார்ப்பதில்லை!
ஏனென்றால், கடவுள் மதம் சார்ந்தவர் அல்ல, மாறாக மனிதம் சார்ந்தவர்...!

அதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுகிறவன் கடவுளுக்கு எதிரானவன் என்று கருத்து கொள்ள வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் மதம் என்பது ஒரு வழிபாட்டு முறையே (A style of worship). மதத்தின் பெயரால் பேதங்கள் வளர்ப்பது அறிவீனம். மதத்தின் பெயரால் வன்முறை செய்வது சாவான பாவம். அஃது கடவுளையே எதிர்க்கும் செயல்.

கடவுளை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். முதலில் மனிதனாய் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனிதரைக் கண்டு கொள்ளாத எவரையும் கடவுளும் கண்டு கொள்வதில்லை..

கடவுளை அடைவதற்கு மதம் தான் ஒரே வழி என்று இல்லை...! மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, எவருக்கும் இடறில்லாமல் வாழ்ந்தாலே போதும்...கடவுளை அடைந்து விடலாம்!

மதத்தின் பெயரால் வன்முறைகள் வேண்டாம், பேதங்கள் வளர்க்க வேண்டாம்...கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்..

கடவுளை, மனிதராகிய நாம் பிரிக்க வேண்டாம்.. மனிதனாய் வாழ்வோம்! மனிதத்தை பேணுவோம்! உலக அமைதிக்காய்  உழைப்போம்!

No comments:

Post a Comment